Monday, October 10, 2011

வாங்கய்யா வாத்யாரய்யா


முன்னாள் அமைச்சர் அரசிலை வீரன் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க, அவரது மனைவி குமுதலோசனி அவரை உலுக்கி எழுப்பினாள்.

"என்னங்க, யாரோ கதவைத் தட்டுறாங்க! எழுந்திரிங்க!"

"கதவுன்னு இருந்தா யாராவது தட்டத்தான் செய்வாங்க! பதவின்னு இருந்தா ஊழல் பண்ணத்தான் செய்வாங்க!"

"தத்துவம் பேசற நேரமா இது? காம்பவுண்ட் கேட் பூட்டியிருக்கு, யாரோ சுவரேறிக் குதிச்சு வந்து கதவைத் தட்டுறாங்கன்னு சொன்னா, இங்கிலீஷ் நியூஸ் சேனலுக்குப் பேட்டி கொடுக்குறா மாதிரி பேசிட்டிருக்கீங்களே. எழுந்திரிங்க!"

"என்னது?" விசுக்கென்று படுக்கையிலிருந்து துள்ளியெழுந்தார் அரசிலை வீரன். "அப்போ கதவைத் தட்டுறது என் கட்சித்தொண்டன்தான்! போய்க் கதவைத் திற!"

குமுதலோசனி கதவைத் திறந்ததும், தலையில் துண்டுபோட்டபடி, அசப்பில் தில்லியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்ட தமிழகத்தலைவர் போல ஒரு உருவம் பம்மியபடி உள்ளே நுழைந்தது.

"வணக்கண்ணே! என்னண்ணே மதிலை இம்புட்டு உசரமா வச்சிட்டீங்க? இதுலே ஏறிக்குதிச்சு வர்றதுக்குள்ளே பத்து கள்ள ஓட்டுக் குத்தியிருப்பேண்ணே!"

"நீ எத்தனை கட்சி தாவியிருப்பே! உனக்கு என் வீட்டு மதிலெல்லாம் ஜூஜூபின்னு தெரியாதா எனக்கு? உன் பேரைக் கேட்டாலே நீ தாவுறதுலே கில்லாடின்னு தெரியுமே?"

"அண்ணே! என் பேரு ரங்கசாமிண்ணே!"

"ஆனா உங்கப்பா பேரு குப்புசாமியாச்சே! உன் பேரையும் இன்ஷியலையும் சேர்த்தா நீ குரங்கசாமிதானேய்யா? நான் சொன்ன மாதிரி செஞ்சியா? எங்கே புது செல்போன்?"

"இந்தாங்கண்ணே!" என்று மடித்துக்கட்டியிருந்த வேட்டியைத் தூக்கி, முக்கால் டிரவுசரில் ஒளித்துவைத்திருந்த செல்போனை எடுத்துக் கொடுத்தான் ரங்கசாமி. "முனியாண்டிங்கிற பேருலே வாங்கியிருக்கேண்ணே! ப்ரீ-பெய்டு தான்! ஒரு சந்தேகண்ணே, உங்க கிட்டே தான் பத்துப் பதினைஞ்சு போன் இருக்குதே, எதுக்கு இன்னொருத்தன் பேருலே போன்?"

"என்னோட போனையெல்லாம் ஒட்டுக்கேட்பானுங்க! சரி, நான் ஒவ்வொரு நம்பராச் சொல்றேன். டயல் பண்ணிக்கொடு! சரியா?"

அரசிலை வீரன் சொல்லச் சொல்ல ஒவ்வொரு எண்ணாக டயல் செய்து கொடுத்தான் ரங்கசாமி. முன்னாள் அமைச்சர் பேசினார்.

"ஹலோ! பச்சைமுத்து, நான் சொன்ன மாதிரி கல்லைக்கட்டிக் கிணத்துலே போட்டுட்டீங்களா? ஓ.கே!"

"ஹலோ! சிங்காரம்! நான் சொன்னது என்னாச்சு? மூட்டையாக் கட்டி ஆத்துலே போட்டாச்சா? வெரி குட்! அடுத்தவாட்டி கண்டிப்பா உங்களுக்கு டிக்கெட் கொடுக்கிறேன். என்னாது..? ஐயையோ, அந்த அர்த்தத்துலே சொல்லலே! பயப்படாதீங்க! தேர்தலிலே நிக்குறதுக்கு டிக்கெட் வாங்கித் தர்றேன்னு சொன்னேன். ஹிஹி! அப்புறம் பேசறேன்."

"ஹலோ! என் கண்ணு, எப்படி இருக்கே செல்லம்? உன்னைப் பார்க்காம என் மனசு மந்திரி இல்லாத இலாகா மாதிரி வெறிச்சோடிக் கிடக்குது. ஹிஹிஹி! கண்டிப்பா வர்றேன்! அப்புறம், நான் சொன்ன மாதிரி அதைக் குளத்துலே போட்டியா? ஓ.கே! குளத்துலே பாதி உனக்குத்தான்! சந்தோஷம்தானே? ஹிஹிஹிஹி!"

"அண்ணே!" ரங்கசாமி இளித்தான். "இப்போ நீங்க யாரோ ஒரு பொம்பளை கூடத்தானே பேசினீங்க?"

"எப்படிக்கண்டுபிடிச்சே?"

"நீங்க சிரிச்சபோது உங்க வாய் காதுவரைக்கும் போச்சு!"

"எத்தனை வருசம் தில்லியிலே மந்திரியா இருந்திருக்கேன்? அதுபோகட்டும், அடுத்த நம்பரை டயல் பண்ணு....."

அரசிலை வீரன் சொல்லச் சொல்ல ரங்கசாமி டயல் செய்து கொடுத்தார்.

"ஹலோ! என்னய்யா ஆச்சு? கடல்லே போடச் சொன்னேனே, போட்டீங்களா இல்லியா? நேத்தே போட்டுட்டீங்களா? என்னய்யா என்ன பண்ணறீங்க ஏது பண்ணறீங்கன்னு தகவல் கூட சொல்லாம இப்படி உணவு மந்திரி மாதிரி ஸைலண்டா இருந்தா என்ன அர்த்தம்? சரி சரி!"

பேச வேண்டியவர்களிடம் பேசி முடித்ததும், செல்போனை ரங்கசாமியிடம் கொடுத்தவர், கூடவே ஒரு விசிட்டிங் கார்டையும் கொடுத்தார். "இதோ பாரு ரங்கசாமி, இந்த சிம்கார்டுலேருந்து இனி போன் பண்ணாதே! ஏதாவது பப்ளிக் பூத்துலேருந்து இந்த கார்டுலே இருக்கிற நம்பருக்குப் போன் பண்ணி, ’எல்லாம் க்ளியர் ஆயிருச்சு; நீங்க வரலாம்,’ன்னு மட்டும் சொல்லிட்டு ஊரை விட்டே ஓடிப்போயிரு! சரியா?"

"இப்பவாச்சும் கதவைத் திறப்பீங்களா? இப்பவும் மதிலைத் தாண்டிக்குதிச்சுத்தான் போகணுமா?"

"நம்ம கட்சி இப்போ இருக்கிற நிலமையிலே எல்லாரும் சுவரேறிக் குதிச்சுப்போறதுதான் நல்லது. கொள்கையை மீறாதே! வந்த மாதிரியே போ!"

ரங்கசாமி அகன்றதும், குமுதலோசனி நெருங்கினார்.

"என்னங்க, உங்க கிட்டே ஒண்ணு கேட்கணும்!"

"என்னது, யாரு அந்தப் பொம்பிளைன்னு தானே, நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்லே! எங்க கட்சித்தொண்டர்...அதாவது தொண்டி!"

"அட அதை யாரு கேட்டாங்க, உங்க யோக்யதையும் உங்க கட்சி யோக்யதையும் தான் உலகறிஞ்ச விஷயமாச்சே! என்னமோ கிணத்துலே போட்டீங்களா, குளத்துலே போட்டீங்களா, ஆத்துலே போட்டீங்களா, கடல்லே போட்டீங்களான்னு கேட்டுக்கிட்டிருந்தீங்களே போனிலே...?"

"அதுவா? நம்ம பினாமி சொத்தையெல்லாம் வேற வேற ஊருலே இருக்கிற வேற வேற ஆளுங்க பேருக்கு மாத்தி வைக்கச் சொல்லியிருந்தேன். கிணறுன்னா கிணத்துக்கடவு, குளம்னா குளத்தூர், ஆறுன்னா ஆத்தூரு, கடல்னா கடலூரு! இப்படி எல்லா பினாமி சொத்தோட டாக்குமென்ட்ஸையும் ஒவ்வொரு ஊருலேயும் ஒளிச்சு வைக்கச் சொன்னேன்."

"எதுக்குங்க?"

"சி.பி.ஐ. ரெயிடு வந்தா அவங்க கையிலே எதுவும் அகப்படாம இருக்கணுமில்லே? அதுனாலே தான் கொஞ்சநாள் முன்னாடியே எல்லாத்தையும் இன்னொருத்தர் பேருலே மாத்தச் சொல்லி எல்லா ஊருக்கும் அனுப்பிட்டேன்."

"நம்ம வீட்டுலேயும் சி.பி.ஐ வருமா? எப்போங்க வரும்?"

"நாளைக்கே வரும். அதுக்குத்தான் ரங்கசாமி கிட்டே நம்பர் கொடுத்து அவங்களுக்குத் தகவல் கொடுக்க சொல்லியிருக்கிறேன். ரொம்ப நல்லவங்க தெரியுமா நம்ம சி.பி.ஐ! நாமளே எல்லாத்தையும் சுத்தமா அப்புறப்படுத்திட்டு, வீட்டைக் கிளீன் பண்ணிட்டோம், நீங்க வந்து ரெயிடு பண்ணினா எதுவும் கிடைக்காதுன்னு தகவல் சொல்லறவரைக்கும் தில்லியிலேருந்து நகர மாட்டாங்க! அவ்வளவு நல்லவங்க!"

"நான் கூட எல்லார் விட்டுலேயும் ரெய்டு வருது! நம்ம வீட்டுக்கு மட்டும் வரவே மாட்டேங்குறாங்களேன்னு உங்க கிட்டே கேட்கலாம்னு நினைச்சேங்க! இப்பத்தாங்க மனசுக்கு சந்தோஷமாயிருக்கு! ஹையா, ஜாலி!"

33 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

உரையாடல்ல புட்டு புட்டு வச்சிருகிங்க...அரசியல்வாதிகளை

நாய் நக்ஸ் said...

சூப்பர் ....
நல்ல பகிர்வு ...

Anonymous said...

உரையாடல் மொக்கை அருமை

Rekha raghavan said...

முடியல...

MANO நாஞ்சில் மனோ said...

செமையான உள்குத்து ஊமைகுத்து பதிவு போங்க....!!!

MANO நாஞ்சில் மனோ said...

"நீங்க சிரிச்சபோது உங்க வாய் காதுவரைக்கும் போச்சு!"//

அவ்வ்வ்வ்வ் முடியலைடா சாமீ....

கும்மாச்சி said...

அப்பா என்ன ஒரு நக்கல், செம கலக்கல்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான நகைச்சுவைப் படைப்பு. ஒன்றும் தெரியாத அப்பாவி அரசியல்வாதிகள் யாராவது படித்தால் இந்த சேட்டையின் டெக்னிக்கைப் பயன் படுத்திக்கொள்வார்கள். பாராட்டுக்கள்.

SURYAJEEVA said...
This comment has been removed by the author.
SURYAJEEVA said...

நான் கூட தான் உங்க பதிவ படிச்சுட்டு வாய் கிழியர அளவுக்கு சிரிச்சேன்... அபப இந்த பதிவும் பொம்பள ஜாதியான்னே

last comment spelling mistake..
so deleted

Unknown said...

அம்மாவ தாஜா பண்ண இட்லிக்காரம்மா பண்ற சித்துவேலைய...நம்மூரு முறதமிழர் முறையில சொல்லி இருக்கீங்க மாப்ள..கலக்கல்!

த. ஜார்ஜ் said...

இந்த பதிவுக்கும் இன்று நடந்த ரெய்டுக்கும் சம்பந்தமில்லைதானே..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாத்தையும் இப்படி அம்பலப்படுத்திட்டீங்களே........?

கோகுல் said...

செம டைமிங் போஸ்ட் போங்க!

இராஜராஜேஸ்வரி said...

தலையில் துண்டுபோட்டபடி, அசப்பில் தில்லியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்ட தமிழகத்தலைவர் போல ஒரு உருவம் பம்மியபடி உள்ளே நுழைந்தது. /

அருமையான வர்ணணை.

தக்குடு said...

Rofl..:)) as usual kalakkal post Mr.சேட்டை. :))

Prabu Krishna said...

ஹா ஹா ஹா ஏது லைவ் ஆக பாத்து போட்ட மாதிரி இருக்கு.

// தகவல் கூட சொல்லாம இப்படி உணவு மந்திரி மாதிரி ஸைலண்டா இருந்தா என்ன அர்த்தம்?//

இது சேட்டையிலும் சேட்டை !

செவிலியன் said...

இது நிஜத்தோட நிழல் போல இருக்கு....சூப்பரா சொன்னீங்க போங்க...

வெங்கட் நாகராஜ் said...

தாங்க முடியல... உங்க சேட்டை... அருமையான பகிர்வு...

உணவு உலகம் said...

வந்து ரசித்தேன்.

முத்தரசு said...

இது சேட்டையா?? செம நெத்தியடி அடி சேட்டை - டைம்மிங் பதிவு

Unknown said...

அடேயப்பா!

அருமையான நகைச் சுவைப்
பதிவு நடையும் எழுதிய முறையும்
பாராட்டுக்கு உரியது
நன்றி!

புலவர் சா இராமாநுசம்

பால கணேஷ் said...

இதத்தான் ஒரிஜினல் சேட்டைங்கறது... என்னா நையாண்டி... அசத்தல்!

வெளங்காதவன்™ said...

ஊமைக்குத்து!

sudhanandan said...

அடடா இப்படிதான் ரெய்டு நடக்குதா?

ஸ்வர்ணரேக்கா said...

//கதவுன்னு இருந்தா யாராவது தட்டத்தான் செய்வாங்க! பதவின்னு இருந்தா ஊழல் பண்ணத்தான் செய்வாங்க!" //

-- என்னா பன்ச்...

settaikkaran said...

//தமிழ்வாசி - Prakash said...

உரையாடல்ல புட்டு புட்டு வச்சிருகிங்க...அரசியல்வாதிகளை//

அதுதானே நம்ம கடையோட இஸ்பெசாலிட்டி? மிக்க நன்றி! :-)

//NAAI-NAKKS said...

சூப்பர் ....நல்ல பகிர்வு ...//

ஹிஹி! மிக்க நன்றி! :-)

//ஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said...

உரையாடல் மொக்கை அருமை//

நீங்க சொன்னாச் சர்தான்! மிக்க நன்றி! :-)

//ரேகா ராகவன் said...

முடியல...//

ஐயையோ, டாக்டர் கிட்டே போங்க சார்! :-)
மிக்க நன்றி!

//MANO நாஞ்சில் மனோ said...

செமையான உள்குத்து ஊமைகுத்து பதிவு போங்க....!!!//

வாங்க அண்ணாச்சி! யாராச்சும் எதிர்க்குத்து குத்தாம இருக்கணும்! :-)

//அவ்வ்வ்வ்வ் முடியலைடா சாமீ....//

அண்ணாச்சிக்கேவா? :-))
மிக்க நன்றி!

//Rathnavel said...

அருமை//

மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//கும்மாச்சி said...

அப்பா என்ன ஒரு நக்கல், செம கலக்கல்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான நகைச்சுவைப் படைப்பு. ஒன்றும் தெரியாத அப்பாவி அரசியல்வாதிகள் யாராவது படித்தால் இந்த சேட்டையின் டெக்னிக்கைப் பயன் படுத்திக்கொள்வார்கள். பாராட்டுக்கள்.//

அப்பாவி அரசியல்வாதியா? சைவப்பூனை பார்த்திருக்கீங்களா வை.கோ ஐயா? :-))
மிக்க நன்றி ஐயா!

//suryajeeva said...

நான் கூட தான் உங்க பதிவ படிச்சுட்டு வாய் கிழியர அளவுக்கு சிரிச்சேன்... அபப இந்த பதிவும் பொம்பள ஜாதியான்னே//

ஹிஹி, அம்புட்டு கிளாமரெல்லாம் கிடையாதுங்க! :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

//விக்கியுலகம் said...

அம்மாவ தாஜா பண்ண இட்லிக்காரம்மா பண்ற சித்துவேலைய...நம்மூரு முறதமிழர் முறையில சொல்லி இருக்கீங்க மாப்ள..கலக்கல்!//

ஆஹா, இப்படியொண்ணு இருக்கா? மிக்க நன்றி! :-)

//த. ஜார்ஜ் said...

இந்த பதிவுக்கும் இன்று நடந்த ரெய்டுக்கும் சம்பந்தமில்லைதானே..?//

ரெய்டா? எங்கே? எப்போ? தெரியாதே...! :-)
மிக்க நன்றி நண்பரே!

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாத்தையும் இப்படி அம்பலப்படுத்திட்டீங்களே........?//

என்னத்தை மிச்சம் வச்சிருக்காங்க பானா ராவன்னா! எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி ஆயிருச்சே? :-)

//கோகுல் said...

செம டைமிங் போஸ்ட் போங்க!//

ஆமாம்! ராகுகாலம் பார்த்திட்டுத்தான் போட்டேன்! :-)
மிக்க நன்றி!

settaikkaran said...

//இராஜராஜேஸ்வரி said...

அருமையான வர்ணணை.//

மிக்க நன்றி சகோ! :-)

//தக்குடு said...

Rofl..:)) as usual kalakkal post Mr.சேட்டை. :))//

வாங்க! ரொம்ப நாள் கழிச்சு வந்ததற்கு மிக்க நன்றி! :-)

//Prabu Krishna said...

ஹா ஹா ஹா ஏது லைவ் ஆக பாத்து போட்ட மாதிரி இருக்கு.//

லைவா? இது dead ஆன மேட்டருங்க! :-)

//இது சேட்டையிலும் சேட்டை !//

மிக்க நன்றி நண்பரே! :-)

//செவிலியன் said...

இது நிஜத்தோட நிழல் போல இருக்கு....சூப்பரா சொன்னீங்க போங்க...//

கிட்டத்தட்ட அப்புடித்தான்! மிக்க நன்றி நண்பரே! :-)

//வெங்கட் நாகராஜ் said...

தாங்க முடியல... உங்க சேட்டை... அருமையான பகிர்வு...//

வாங்க வெங்கட்ஜீ! நட்சத்திரமானாலும் மறக்காம வந்ததுக்கு மிக்க நன்றி! :-)

settaikkaran said...

//FOOD said...

வந்து ரசித்தேன்.//

மிக்க நன்றி! :-)

//மனசாட்சி said...

இது சேட்டையா?? செம நெத்தியடி அடி சேட்டை - டைம்மிங் பதிவு//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)

//புலவர் சா இராமாநுசம் said...

அடேயப்பா!
அருமையான நகைச் சுவைப்பதிவு நடையும் எழுதிய முறையும் பாராட்டுக்கு உரியது நன்றி!//

மிக்க நன்றி புலவர் ஐயா! உங்கள் தொடர்ந்த வருகையும் கருத்தும் உற்சாகத்தை அதிகரிக்கின்றன. :-)

//கணேஷ் said...

இதத்தான் ஒரிஜினல் சேட்டைங்கறது... என்னா நையாண்டி... அசத்தல்!//

வாங்க கணேஷ்! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)

//sudhanandan said...

அடடா இப்படிதான் ரெய்டு நடக்குதா?//

குத்துமதிப்பா இப்படித்தான் நடக்குதுன்னு சொல்றாய்ங்க! :-)
மிக்க நன்றி!

//ஸ்வர்ணரேக்கா said...

-- என்னா பன்ச்....//
மிக்க நன்றி சகோ! :-)

G.M Balasubramaniam said...

நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன் ,நீ அழற மாதிரி அழு, என்பது போல்தானா, இந்த ரெய்ட் சமாசாரங்கள்.? இவ்வளவு தாமதமாக செயல்பாடுகள் இம்மாதிரி சந்தேகங்களுக்கு நிச்சயம் தீனி போடும். சிந்திக்க வைக்கும்பதிவு.

middleclassmadhavi said...

ippadiththaan nadanthirukkoMOnnu thONuthu! :-))

settaikkaran said...

//G.M Balasubramaniam said...

நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன் ,நீ அழற மாதிரி அழு, என்பது போல்தானா, இந்த ரெய்ட் சமாசாரங்கள்.? இவ்வளவு தாமதமாக செயல்பாடுகள் இம்மாதிரி சந்தேகங்களுக்கு நிச்சயம் தீனி போடும். சிந்திக்க வைக்கும்பதிவு.//

மிகச்சரியாகச் சொன்னீர்கள் ஐயா! அவநம்பிக்கையே மிதமிஞ்சி நிற்கிறது. மிக்க நன்றி!

//middleclassmadhavi said...

ippadiththaan nadanthirukkoMOnnu thONuthu! :-))//

வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கின்றன. :-)
மிக்க நன்றி!